அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. DE S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.