அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Laugfs எரிவாயு குறித்து வெளியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான laugfs எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.