அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பயிர் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய குழு

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை பெற சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு குறிப்பிட்டது அமைச்சர் கே. டி. லால்காந்தவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக விவசாய அமைச்சின் செயலாளர் டி. எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார்.
இந்தக் குழுவில் 15 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.