வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளித்த…

பெரும்பான்மையை மீண்டும் நிரூபித்த தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்.
தேசிய மக்கள் சக்தியின் வருடாந்த மே தினக் கூட்டம் சற்று முன்னர் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.. இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் அதாவது கிட்டத்தட்ட கால் மில்லியன் அரசாங்க ஆதரவாளர்கள் பங்குபற்றுதலில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இதன்போது கலந்து கொண்டனர். மேலும், சீன மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். கூட்டத்தின்…