7 News Pulse

IceWarp Expands into Sri Lanka, Fostering European Innovation in Collaboration with FentonsIT

IceWarp, a global leader in business communication solutions, has officially launched its cutting-edge platform in Sri Lanka, bringing European expertise in email and collaboration solutions to support the country’s evolving business landscape. This expansion is driven by a strategic partnership with Fentons Information Technology (FIT), the Information Technology arm of Hayleys Fentons Limited. The grand…

Read More

புதிய பாம்பன் பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும்…

Read More

திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, கைதானவர்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது.

துபாயில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்…

Read More

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (ஏப்ரல் 05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்பதனை இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த இலங்கை அணிவீரர்களை சந்தித்தார் மோடி

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 05) மாலை சந்தித்தார். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், ருமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, ரவீந்திர புஷ்பகுமார, மார்வன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகிய வீரர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read More

பாதுகாப்பு , சுகாதாரம் உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கை இந்தியா இடையே பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (ஏப்ரல் 05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. அவையாவன – 01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான…

Read More

இந்திய பிரதமர் இலங்கை எதிர்கட்சித்தலைவருடனும் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(ஏப்ரல் 05) சந்தித்தார்.. இதன்போது இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளா

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரமானந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 200…

Read More

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்

இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன”…

Read More