The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்
இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தனது நன்றியை இவ்வாறு தெரிவித்தார் இந்திய பிரதமர் மோடி “இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும். அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது. இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”
இந்நிலையில் அங்கு உரையாற்றிய நரேந்திர மோடி, திருவள்ளுவரின் குறள் ஒன்றை உதாரணம் காட்டி இலங்கை மக்களுக்கு உரையாற்றினார்.
அதாவது உண்மையான நண்பரின் கேடயம் மற்றும் அவரது நட்பு இல்லை என்றால் எதிரிக்கு எதிரான பெரிய பாதுகாப்பு என்ன என வினவியுள்ளார்.
குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் இன்று, நான் அவரது முதல் வெளிநாட்டு விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ளேன். இது நமது சிறப்பு உறவின் ஆழத்தைக் காட்டுகிறது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.