இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்
இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன”…

