இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய புத்தல, மஹாகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்