Doneproduction

சீனாவில் பரவும் புதிய வைரஸ்

சீனாவில் புதிய வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த வைரஸ் கோவிட் வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுவதுடன்இது மனிதர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வனப்பகுதில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்

ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து சிறுவன் ஒருவனைபோலிஸார் மீட்டுள்ளனர் நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன், பூந்தல தேசிய வனத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சிறுவனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இந்தக் சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும், வனப்பகுதிக்குள் சிறுவன் எவ்வாறு சென்றார்…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியையும் மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Read More

கொழும்பில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.

கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More