Doneproduction

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

களுத்துறையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ – பெலவத்த வீதியில் லொறியுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது களுபோவிட்டிய பகுதியை சேர்ந்த 55 மற்றும் 27 வயதான பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.   அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.   அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.   முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிலர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read More

தேபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்திருந்தார்.  அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) வரை விளக்கமறியலில்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றன.  இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. 

Read More

முப்படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் கைது

சட்டரீதியாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.  அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read More

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.  இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும்.  இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

Read More

உக்ரைன் உடனான போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்த ரஷ்யா

அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் (Yuri Ushakov) இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய தினம் யூரி உஷாகோவுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

யானை தாக்கியதில் ஒருவர் காயம்

ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.  கோவில் ஊர்வலம் முடிந்து, யானையைக் கோவில் கம்பத்தில் கட்டி வைத்து ஓய்வெடுக்க வைத்தபோது, ​​ஒரு இளைஞன் யானைக்கு உணவளிக்க முயன்றதாகவும், யானை திடீரென அந்த இளைஞனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  யானையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கொட்டாகலைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காயமடைந்தவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனத் திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.  யானைப் பாகன் அதிக…

Read More