Doneproduction

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.  அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ​மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

தேயிலை தோட்டத்திலிருந்து சடலமொன்று மீட்பு

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு 10ஆம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து நேற்றிரவு (11) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்த நிலையில், இரவு ஏழு மணி வரை வீடு திரும்பவில்லை. பின்னர் தோட்ட மக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் சட்ட…

Read More

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் வெலிகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணை…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட பணிகள்

CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று (11) முதல் கொழும்பு மாவட்டத்தில் வாகன புகை சோதனை தொடர்பான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மாத காலத்துக்குள் 1000 வாகனங்களில் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். மேலும் புகை பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் எனவும்,அதன்படி, 14 நாட்களுக்குள் பராமரிப்பு ஆணையின்படி திருத்தங்கள்…

Read More

இலங்கைக்கு கிடைத்த மற்றுமொரு அங்கிகாரம்

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல் இந்த உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் மேற்கொள்ளப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக…

Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்றுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள்அனைத்தும் இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்தை மீறும் கல்வி ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சை மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடைகின்றது

Read More

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…

Read More

25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார். அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More