JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பான முறைப்பாடுகளை ஆராய புதிய குழு நியமனம்!
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால்…