Doneproduction

புதிய வாகனங்களுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த கப்பல்

தற்போதைய அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், ஜப்பானில் இருந்து நாட்டிற்கு புதிய வாகனங்களை உள்ளடக்கிய இரண்டாவது கப்பல் இன்று (27) பிற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. JUPITER LEADER என்ற மேற்படி கப்பல், 196 வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தற்போது நாட்டை வந்தடைந்தது.

Read More

இலங்கையின் துறைமுக முதலீடுகளுக்கு தயாராகும் நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின்…

Read More

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் விசேஷட சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின்…

Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க 12 தொடர்புடைய மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது….

Read More

பஹ்ரைன் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பஹ்ரைன் செல்பவர்கள் சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனுக்குள் பிரவேசித்து அனுசரணை இன்றி அதனை பணியாளர் விசாவாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அங்கு சுற்றுலா விசாவை அனுசரணையுடன் பணி விசாவாக மாற்றுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தொழில்…

Read More

மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி

மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. எனவே, மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்….

Read More

உலகம் போற்றும் மகா சிவராத்திரி தினம் இன்று

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களிலும் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன

Read More

நாட்டில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும்…

Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மிக விரைவில் சம்பந்தப்பட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Read More

“CLEAN SRILANKA ” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியா உதவி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது. புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்தோனேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் இரு நாடுகளுக்கும் இடையிலான 70 வருட நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் புதிய அரசாங்கங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு…

Read More