Doneproduction

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

Read More

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Read More

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் சந்திப்பில் நேற்று (23) பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு திகதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு எதிர்வரும் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். ஆறாவது தவணையிலிருந்து $335 மில்லியனைப் பெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Read More

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

சுமார் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (24) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வசம் இருந்து கஞ்சா கலந்த 01 கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் குஷ் போதைப்பொருளை ஒரு சிறிய பையில் சூட்சுமமாக பொதி…

Read More

கடலில் மூழ்கி உயிரிழந்த வெளிநாட்டுப் பெண்

பெந்தோட்டை,பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் 25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

திருத்தப்பட்ட மசோதாக்கள் வர்த்தமானியில் வெளியீடு

திருத்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் பெறுமதி சேர் வரி மசோதா மற்றும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் திருத்தப்பட்ட உள்நாட்டு வருவாய் மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவுகளுக்கு அமைவாக, தொடர்புடைய திருத்தப்பட்ட மசோதாக்கள் பின்வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட வரைவு மசோதாக்கள் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த ஒருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அழகுக்கலை நிபுணர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

அதிக வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம்…

Read More

முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு நகரத்தின் பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப்…

Read More