இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த வாகனம்
பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.