gurueaswar

உழைக்கும் வர்க்கம் பேரழிவுக்கு பொறுப்பேற்க முடியாது – புபுது ஜயகொட

தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் பொறுப்பேற்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனமும் முதலாளித்துவ வர்க்கமுமே இந்த அழிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டு மென முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் ‘தித்வா சூறாவளியின் துயரத்துடன் முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் 37 சதவீதத்திற்கு  பெரும்…

Read More

வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை –அதிகாரிகளுக்கு ஆலோசனை

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின்  மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் …

Read More

நானுஓயா – பதுளை  புகையிரத சேவை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் – போக்குவரத்து பிரதி அமைச்சர்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. நானுஓயா –பதுளை  புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தற்போது வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அனர்தங்களால் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் மிக…

Read More

கல்தோட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்  பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச்  சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்துள்ளனர்.

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை (24) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 310 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 60,000 ரூபாய் பணம் மற்றும் கார் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரை கைது செய்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More

எஹெலியகொடையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில்,  போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் ஆகும். விசேட சோதனை நடவடிக்கையின்…

Read More

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் நத்தார்: நம்பிக்கையும் மீட்சியும்

காஸா பகுதியில் போர்நிறுத்தம் நிலவும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நத்தார் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளன. ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, பாரம்பரிய ஊர்வலமாக ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் வந்தார். காஸா கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து மக்களின் அன்பும் தைரியமும் செய்தியாக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த விழா மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சுற்றுலாவை சார்ந்த பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் மீண்டும் வாழ்வாதார…

Read More

கார் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மீட்பு – பொலிஸார் விசாரணை!

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, T-56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வாகனத்திற்குள் இருந்து T-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக…

Read More

முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து ; குழந்தை உட்பட மூவர் காயம்!

காலி – பெரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More