நம் நாட்டின் பிரபல பாடகர் உயிரிழந்தார்

பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார். பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள அவர், 1975 ஆம் ஆண்டளவில் முழுநேர இசை வாழ்க்கையில் நுழைந்து 4 தசாப்தங்களுக்கும் மேல் இசை துறையில் பணியாற்றியிருந்தார்.

Read More

நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை…

Read More

வவுனியாவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

உயர் தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியாகின. அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று பாடங்களில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும்…

Read More

2024 இல் உயர்தர பரீட்சை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.  2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.  அனர்த்த நிலைமையின் காரணமாக அதன் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.  2024 ஆம் ஆண்டில் 333,185 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில்…

Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கு வழங்கவேண்டிய விடுமுறை விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை…

Read More

14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது…

Read More

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வௌியான தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்…

Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த…

Read More

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு…

Read More