தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
செம்மணி மனித புதைகுழி ; திறைசேரிக்குத் திரும்பிய மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என…