இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக…

Read More

பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் விசேட நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் சோதனை

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,995 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 659 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 279 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 539…

Read More

“முழு நாடுமே ஒன்றாக”: 956 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 486 கிராம் ஹெரோயின், 544 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 83 கிராம் கஞ்சா, 15,511 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 224…

Read More

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின்  சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.      அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார்…

Read More

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு திரும்பியது!

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறித்து, தற்போது கணினியில் சேர்க்கப்படவில்லை எனவும், எதிர்வரும் சில நாட்களில் அது கணினியில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் 03 மின் பிறப்பாக்கிகள் மூலம் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு  வழங்கிவந்த நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே தேசிய மின்சார…

Read More

வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதிரடி

இலங்கையில் வாகனப் பதிவு மற்றும் வாகன உரிமை மாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது  ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் முக்கிய விபரங்கள்: விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்: மோட்டார் சைக்கிள்கள், கை உழுயந்திரங்கள் (Hand Tractors), டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். புதிய உரிமையாளரின் தேசிய அடையாள…

Read More

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். செலான் வங்கியின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க மற்றும் பிரதான நிதி அதிகாரி ஷானுக ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

யாழில் விபத்து – ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் (10.1.2026) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை. இதேவேளை இன்றையதினம் அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக…

Read More

இலங்கையை இன்று ஊடுருவுகிறது தாழமுக்கம்.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4 மணி நிலவரப்படி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்று (09) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கை கடற்கரையை…

Read More