வரியை குறைப்பதாகக் கூறிவிட்டு, 500 சதவீதத்தால் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது – சமிந்திரானி கிரியெல்ல

மக்களின் வரிச் சுமையை குறைப்பதாகக் கூறிவிட்டு, வரியை 500 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல செவ்வாய்க்கிழமை (06) எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிகப்படியான வரிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவதாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால்,…

Read More

கடல் சீற்றம் அதிகரிப்பு – திருகோணமலை

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.  திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.  தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல்…

Read More

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார்.  இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த…

Read More

திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்த அமைச்சரவை அனுமதி

எமது நாட்டின் தேசிய போசாக்குப் பற்றிய பங்களிப்புக்களின் ஒரு பகுதியாக திரிபோசா வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலக உணவுத் திட்டம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.  அதற்கமைய, திரிபோசா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் தரப்பண்பை அதிகரிப்பதற்கும், மற்றும் திரிபோசா விநியோகத்தை பலப்படுத்தும் நோக்கிலும் ‘இலங்கையில் மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமையைக் கட்டியெழுப்பல்: பயிரிடுவோம் கட்டியெழுப்புவோம்’ எனும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் கருத்திட்ட முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது….

Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய தரமுயர்த்துவதற்கும், சர்வதேசமயப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்தாண்டு காலப்பகுதிக்கு கீழ்வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 

Read More

குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.  அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ்…

Read More

வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் நாம் முறைமையொன்றை பின்பற்றி வருகின்றோம். அவர்களது படகுகள் தொடர்பிலும் நாம் முறைமையொன்றை பின்பற்றுகின்றோம். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது. வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள “குஷ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் செனல்’ வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் குஷ்  போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனவும்  27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள…

Read More

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கும் மேலதிகமாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது – அரசாங்கம்

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6056 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால் இவற்றுக்கு மேலதிகமாக மேலும் 25 000 வீடுகளை நிர்மாணிக்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் விரைவில் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்தோடு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50 000 ரூபா கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும்…

Read More

டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில்  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு  எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை  விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட  டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா என தேடிப் பார்த்து அறிக்கை …

Read More