10 ரூபாவால் பாணின் விலை குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடுஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “KRISH” பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகைகள் இன்று (வெப்ரவரி 18) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை உயர் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவிற்க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read More

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்ரவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கைது.

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கடந்த 12 மணித்தியாலத்திற்குள் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, துபாயிலிருந்து இன்று திங்கட்கிழமை (வெப்ரவரி 18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவந்த 68,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 340 சிகரட்டு பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Read More

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானம் இன்று எட்டப்படும்.

பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (வெப்ரவரி 18) எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் பேக்கரி பொருட்கள் செய்யும் மாவின் விலையை 10ரூபாயால் குறைத்ததன் பின் இந்த தீர்மானத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன கூறினார்.

Read More

மாணவர்களின் பெறுபேறுகளை நோக்காக கொண்டு அனுராதபுரத்தில் 55 பாடசாலைகள் இரவிலும் நடத்தப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதனால் அவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கிலும், படத்திட்டத்தினை மாணவர்களுக்கு முழுமையாக வழங்கும் நோக்கிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மேலாதிக வகுப்புகளை வடமத்திய மாகாண கல்வித்திணைக்களம் இலவசமாக செயற்படுத்திவருகின்றது. வடமத்திய மாகாண ஆளுநர் திரு. வசந்த ஜினதாச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாகாண ஆளுநர் அலுவலகம், அனுராதபுரம் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவை…

Read More

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.

முன்னொருபோதும் இல்லாதவகையில் தினமும் வெப்பநிலையில் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரிக்கை மட்டத்தை அடையவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்துவரும் 24மணிநேரத்துக்கும் இது நலவக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படிவடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு அவசர தேவைகள் மற்றும் இதர முக்கிய கரணங்கள் இன்றி வெளியில் நடமாடுதல் தவிர்க்குமாறும், வெயிலில் வேலையெய்ப்பவர்கள் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும்…

Read More

கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா காலமானார்

இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக துறையில் நெடுங்காலமாக கோலோச்சிய கலாசூரி தேச நேத்ரு கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அம்மா சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை அவர் மகன் சியாமலங்கன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரால் கலைத்துறையில் இன்னுமோர் தளத்திற்குச்சென்றவர்கள் அதிகதிகம். கடந்த சில வருடங்களாக அவுஸ்ரேலியாவில் சுகவீனமுற்று இருந்தவேளையிலும் தனது மாணவர்கள் இலங்கையில் செய்யும் கச்சேரிகளை தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தியவர். இவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாககும். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Read More

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற ஏற்றமும் இரக்கமும்

“வளமான நாட்டுக்கான முதற்படி” என்ற தொனிப்பொருளில் நிதியமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதிய வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்க முன் “2028 ஆம் ஆண்டு கடன்களை கடனை மீளச் செலுத்தும் வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்தார். 2025 ஆண்டிற்க்கான புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த ஆண்டு எம்.பி.க்களின்…

Read More

திலிண களுதொடகேவினால்வேகத்தில், தூரத்திலும் வித்தியாசப்பட்ட இரண்டு அம்சங்கள் ஒரு புகைப்படத்தில் – இலங்கை புகைப்பட கலைஞரின் கைவண்ணம்.

இலங்கை புகைப்பட கலைஞர் திலிண களுதொடகேவினால் பெப்ரவரி 4ம் திகதி கொழும்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டபின் தற்போது அந்த புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது. பூமியில் இருந்து சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம் இடைவெளி, அதேநேரம் Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும். இவ்விரண்டையும்ஒரே கமெராவுக்குள் மிக லாவகமாக அடக்கி அட்டகாசம் படம்பிடித்துள்ளார். இவரது இன்ஸ்டா…

Read More