Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
இலங்கை சிறுவர்களுக்கிடையில் அதிகரித்துவரும் மந்தபோசணை
இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கணிசமான அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசணை மட்டம் தொடர்பில் அவ்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்ந்த போதிலும், கடந்த ஆண்டு இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை நோக்கிய பாதையில் பயணித்தது. குறிப்பாக கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 2024 இன் முதலாம் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
அவ்வாறு பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், வறுமை, மக்களின் நலிவுற்றதன்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற நிலைமைகள் தொடர்ந்தன. நாட்டின் மொத்த சனத்தொகையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 31 சதவீதமாகப் பதிவானது.
உலக வங்கியின் எதிர்வுகூறலின்படி அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு நாட்டின் வறுமை மட்டம் 25 சதவீதத்துக்கும் மேல் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்.
இந்நிலையில் எமது 4 வகையான செயற்திட்டங்கள் ஊடாக நாம் 1.5 மில்லியன் பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருந்ததுடன், அவர்களில் 61 சதவீதமானோர் பெண்களாவர். அதன்படி உடனடி உணவு விநியோகத்திட்டத்தின் ஊடாக 3900 மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அத்தோடு 260,000 டொலருக்கு மேற்பட்ட நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இருப்பினும் இலங்கையின் போசணை மட்டமானது அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் கணக்குடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் திட்டம் மற்றும் திரிபோஷா வழங்கல் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அவசியமான எமது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவதன் ஊடாக இந்நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு நாம் முனைகின்றோம் என அறியத்தருகின்றார்கள்.