தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை சிறுவர்களுக்கிடையில் அதிகரித்துவரும் மந்தபோசணை
இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கணிசமான அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசணை மட்டம்…

