Department of examinations

நாளை நள்ளிரவு முதல் உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இன்னும் நடத்தப்படாத பாடங்களுக்கு, மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு  செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் கீழ், மேலதிக வகுப்புகள், பாடவாரியான கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் அச்சிடல் மற்றும் விநியோகம், பரீட்சை வினாக்களை ஒத்த உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துதல் போன்ற அனைத்தும் தடை செய்யப்படும். இந்த உத்தரவை மீறுவோர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், நடத்தப்படாத…

Read More

மாகாண சபைத் தேர்தல்களுக்கான பாராளுமன்ற விசேட குழு பிரேரணை சமர்ப்பிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். மாகாண சபைத்  தேர்தலை விரைவாக நடத்துவதற்காகவே  புதிய குழு ஒன்றை   நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காணப்படும்  குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக…

Read More

திருகோணமலை வீர நகர் பகுதியில் மூன்று வீடுகள் சேதம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (05) மூன்று வீடுகள் கடலுடன் தாழ் இறங்கியுள்ளது. குறித்த வீட்டில் வசிக்கும் 19 நபர்கள் உறவினர்கள்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். தொடர்ந்தும் கடலின் அலை அதிகமான தாக்கம் காரணமாக குறித்த வீடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சீரற்ற கால நிலை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்…

Read More

மின்சார சபை இலாபமடைகிறது ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது ; மின்பாவனையாளர் சங்கம் வலியுறுதல்

மின்கட்டண அதிகரிப்புக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் அதற்கான தரவுகளில் உண்மைத்தன்மை கிடையாது. மின்சார சபை இலாபமடைகிறது ஆகவே மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்று மின்பாவனையாளர் சங்கம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. மின்கட்டணத்தை திருத்தம் செய்வதை மீள்பரிசீலனை செய்யும் 03 மாத காலத்தில் பிரதான நீர்மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்நிலைகளுக்கு கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சி குறைந்தமை, இலங்கை மின்சார சபையின் கடன்,எரிபொருள் விலையின் மாற்றம்,புதிய மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து…

Read More

மருந்து தட்டுப்பாடு மத்தியில் இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம் ஆபத்தானது – ராஜித்த சேனாரத்ன

நாட்டில் இன்று பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள சுகாதாரம் தொடர்பான திருட்டு ஒப்பந்தம் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டில்  400க்கும் அதிக மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் மயக்கமூட்டும் மருந்துகளுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.அதேநேரம் சுகாதாரம் தொடர்பில்…

Read More

அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க…

Read More
vijitha-hearth

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் – அமைச்சர் விஜித்த ஹேரத் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக…

Read More
DEATH

உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி!

அநுராதபுரம் – மகாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு பதிவாகியுள்ளது. உலுக்குளம் பகுதியிலிருந்து பேமடுவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த நபர், உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.  விபத்தில் காயமடைந்த நபர் பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர். உயிரிழந்தவரின் சடலம்…

Read More
mahinda rajapaksa

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.  அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள்…

Read More

FCIDக்கு முன்னிலையாகவில்லை என்றால் ஜோன்ஸ்டன் மீது பிடியாணை நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என்றால், அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுகிறது. இதே வழக்கில், சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல கைது செய்யப்பட்டு, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்….

Read More