பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்…

Read More

விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 57 பேர் கைது

பமுனுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்துபசாரம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்கு பொலிஸாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று (23) இரவு நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கு தங்கியிருந்த 7 பெண் சந்தேக நபர்களையும் 34…

Read More

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

கடந்த மார்ச் 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாகலகம் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.  சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சந்தேக நபர், நேற்று (23) கிராண்ட்பாஸ் பொலிஸாரால்…

Read More

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகனயாய பிரதேசத்தில் தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 64 வயதுடைய பதுலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

தெவிநுவர துப்பாக்கிச் சூடு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.  இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் உழவு…

Read More

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக…

Read More

பொலிஸாரின் சுற்றிவளைபில் இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி…

Read More

தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, “பொதுமக்களிடம் முறைப்பாடுகள் இருந்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டை அளித்த நபரும்…

Read More