கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி – தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதே நாளில், களுத்துறை – பேருவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெட்டிமுல்ல, மல்பொக்க வீதி உள்ளிட்ட அண்டிய வீதிகள் சீர்திருத்தப்படுவதாகவும் முறைப்பாடு கிடைத்திருந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பேருவளை பிரதேச சபையால் இந்த சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது.
அதன்படி, சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.