தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது .

கொழும்பு, இலங்கை – இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தித் தொழில்துறையில் புதியதொரு சாதனையைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணினி உற்பத்தியாளரான EWIS Colombo Ltd நிறுவனம், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளின் முதற்தொகுதியை சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை நிகழ்வானது, சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் வளர்ந்துவரும் சக்தியாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளமை மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் புத்தாக்கம், தரம் மற்றும் மேன்மை…

Read More

இரண்டு மாடி கட்டட குத்தகை மோசடி – வாக்குமூலம் பதி

தெஹிவளையில் இரண்டு மாடி கட்டடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுக்க போலி பத்திரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக இவ்வாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றுக்கு இதனை தெரிவித்துள்ளதோடு இந்த சம்பவத்தில், குற்றவியல் குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அரசியல் களத்தை ஆட்டிப்படைக்கும் பட்டலந்த அறிக்கை – இன்று ரணில் சொல்லப்போவது என்ன?

சென்றவாரம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். இதனை மையப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (மார்ச் 16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை…

Read More

சுமார் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திருமலை நவம் தெரிவு.

திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (மார்ச் 15) திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. தஇந்த சங்கத்தின் தலைவராக திருமலை நவம்(நவரட்ணம் – முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். துணை தலைவராக கவிஞர் க….

Read More

அஸ்வெசும உதவித்தொகை வங்கிகளில்.

அஸ்வெசும மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வங்கி கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் குறித்த பணத்தைப் பெறமுடியும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை(SLIPS) தொடர்பான அமைப்பின்…

Read More

மார்ச் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் திகதி மார்ச் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதே ​நேரம் இந்த ஆண்டின்…

Read More

ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்.

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மொஹமட் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

Read More

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச் 15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பெண் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Read More