இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். கனேடிய மற்றும் மெக்சிகன் இறக்குமதிகள் மீதான புதிய 25% வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கிய பின்னர் டிரம்பின் பரஸ்பர வரி வாக்குறுதி வந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக…

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும்…

Read More

உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

இலங்கையில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

Read More

Laugfs எரிவாயு குறித்து வெளியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான laugfs எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. DE S. ராஜகருணா தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும்…

Read More