அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றம்..

அமெரிக்காவில் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் இதன்மூலம் அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அந்நாட்டு கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் தான் அறிவித்ததைப் போலவே கல்வித்துறையை கலைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவால் தனியார் பள்ளிகள் பய ன் பெறக்கூடும் என கூறப்படுகிறது.

Read More

62 வங்கிகளில் கொள்ளையடித்த மக்கள் விடுதலை முன்னனி

1985 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். பாதீடு தொடர்பான விவாதத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் வங்கிகளைக் கொள்ளையடித்ததாக ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார். மேலும் இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் 62 வங்கிகளைக் கொள்ளையடித்ததாக அவர் தெரிவித்தார். இதன் போது வங்கிகளிலிருந்து…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.  இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும்.  இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

Read More

உக்ரைன் உடனான போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்த ரஷ்யா

அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் (Yuri Ushakov) இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய தினம் யூரி உஷாகோவுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். கனேடிய மற்றும் மெக்சிகன் இறக்குமதிகள் மீதான புதிய 25% வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கிய பின்னர் டிரம்பின் பரஸ்பர வரி வாக்குறுதி வந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக…

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும்…

Read More

உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

இலங்கையில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

Read More