5 கோடி பெறுமதி கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது

மீன்களை ஏற்றிச் செல்லும் லொறியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் துன்கல்பிட்டிய பொலிஸாரால் இன்று (ஏப்ரல் 09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். துன்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது லொறியிலிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 5 கோடியே…

Read More

அமெரிக்க வரித்தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தூதருடன் கலந்துரையாடல்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்’குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் இதன் பொது கலந்துரையாடியுள்ளார். இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாக பதிவிட்டுள்ளார்.

Read More

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர். அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள்…

Read More

சூர்யாவையும் விடாத Ghibli ஃபீவர்..! கொஞ்சம் இத பாருங்க

நடிகர் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததை, Ghibli ஸ்டைலில் அப்டேட் கொடுத்து அசத்தி உள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்களும் டீசரும் ரசிகர்கள் மத்தியில், நல்ல…

Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (மார்ச் 10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார். மாலை…

Read More