ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்

சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உக்ரைன் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா இன்னும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கார் விற்பனை வளர்ச்சி

இந்தோனேசியாவின் ஓட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசியாவின் கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 2.2% உயர்ந்துள்ளது, இது ஜூன் 2023 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள முதல் வளர்ச்சியாகும். இதனை பெரிதாக பார்ப்பதற்கு காரணம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தேர்தலின் போது ஏற்பட்ட பலவீனமான செலவினம் மற்றும் கார் வாங்குவதை தாமதப்படுத்தும் போக்கு காரணமாக, கார் விற்பனை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி…

Read More

இரவுநேரங்களில் உக்ரேனை தாக்கும் ரஷ்யா

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதோடு முப்பதிற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் எட்டு 5 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாக கட்டிடமும் 30 கார்களும் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளபக்கத்தில் “எங்களைப் போலவே அமைதியை…

Read More

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு.

கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று(மார்ச் 7) இரவு டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டர் கேளிக்கை விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 12ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க…

Read More

ஹமாஸை அறிக்கை மூலம் எச்சரித்த டிரம்ப்

காசா பகுதியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். காசா பகுதி மக்கள் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஹமாஸை அங்கிருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.46 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Read More

இந்தியா மற்றும் சீனா மீதான வரிகள்

நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 2 முதல் இந்தியா உட்பட அமெரிக்காவின் பல வர்த்தக கூட்டாளிகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். கனேடிய மற்றும் மெக்சிகன் இறக்குமதிகள் மீதான புதிய 25% வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கிய பின்னர் டிரம்பின் பரஸ்பர வரி வாக்குறுதி வந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக…

Read More

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Read More

அவுஸ்திரேலியாவிற்கு புயல் எச்சரிக்கை விடடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக பிரிஸ்பேன் முழுவதும் 20,000 சொத்துக்கள் பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Read More

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More