இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்

இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன”…

Read More

இந்தோனேசியாவில் மண்சரிவு – 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  மலைப்பாதையில் பயணித்த பல மகிழுந்துகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு…

Read More

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்.

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நேற்று(ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து உலகலவியரீதியில் பல இடங்களில் 7 ரிக்டருக்கும் அதிகளவான நிலநடுக்கம் பதிவாவதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. பின் அவை தளர்த்தப்படுகின்றன.

Read More

இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார். அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல்…

Read More

இந்திய பிரதமரின் வருகையும் , இலங்கையில் உருவான பேசுபொருளும்.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட சர்ச்சைகளையடுத்து, பதாகையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட வடிவமைப்பை தனது Facebook கணக்கிலும் பகிர்ந்துள்ளார். இந்த மாற்றம், டிஜிட்டல் வடிவமைப்பில் மாத்திரமா அல்லது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த…

Read More

இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

மியான்மர் நிலநடுக்கம் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மிரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மண்டலே நகருக்கு அருகில் இதன் மையப் பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது….

Read More

48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம்.. கப்பலில் காத்திருந்த அதிர்ச்சி

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர். அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும். இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான…

Read More

மெக்சிகோ எல்லையை கண்காணிக்க குதிரைகளைப் பயன்படுத்தும் வீரர்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Read More