பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்.

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கொரிய E8 விசா ஒப்பந்தம் முன்னர் கையெழுத்தானதாக பரவிய வதந்திகளுடன் தொடர்புடைய இடைநிலை நிதி பரிவர்த்தனைகள் இனி நடைபெறாது என்றும் அவர் கூறினார். அதன்படி, நியாயமான செலவில், குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் E8 இன் முதல் குழுவை நாட்டிற்கு அனுப்ப…

Read More

அமெரிக்காவின் உதவி இடைநிறுத்தலும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியும்.

உக்ரைன் அதிபருடனான காரசாரமான கலந்துரையாடலை அடுத்து அமேரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். இருப்பினும் சிலவேளைக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு…

Read More

ஆரம்பமாகும் தவக்காலம்.

Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது. இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை….

Read More

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தநிலையில், 265 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின்…

Read More

அனந்த் அம்பானியின் கனவுத்திட்டத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் நீண்ட நாள் கனவுத் திட்டமான வந்தாரா(Vantara) விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த அழகிய மையத்தை பிரதமர் மோடி இன்று(மார்ச் 4) திறந்து வைத்ததோடு ஒவ்வொரு விலங்குகளாக தனித்தனியே நேரம் செலவு செய்து உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர் மோடி. அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகைதந்த பிரபலங்கள் இந்த வந்தாராவை பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Read More

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

Read More

ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…

Read More

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நோய் குறித்த அறிவிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவருக்கு இன்னும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் காரணமாக அவருக்கு செயற்கை ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், போப்பின் தற்போதைய நிலையை அறிய இன்னும் 24 மணிநேரம் அல்லது 48 மணிநேரம் தேவை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Read More

உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More