Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
CEMS-Global USA நிறுவனம் அதன் மதிப்பு மிக்க ஜவுளி கண்காட்சி தொடரின் 14வது பதிப்பை அறிவித்துள்ளது.

CEMS-Global USA அதன் உலகளாவிய புகழ்பெற்ற ஜவுளி தொடர் கண்காட்சி நடவடிக்கைகளின் 14வது இலங்கை பதிப்பை குறித்து அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வு இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 15 மார்ச் 2025 வரை கொழும்பு 10 இல் உள்ள SLECC இல் நடைபெறும்.
CEMS-Global USA இன் குழுவின் பிரதம நிறைவேவற்று அதிகாரி (Group CEO) எஸ். எஸ். சர்வர் இந்த நிகழ்வு முன்னணி தொழில் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் என்றும், இது ஜவுளி மற்றும் ஆடை இயந்திரங்கள், நூல், துணி, டிரிம்ஸ், பாகங்கள், சாயப்பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு ஒரு முக்கியமான தளமாக அமைந்துள்ளதுடன், இது உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய விநியோகஸ்தர்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துகிறது. ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) செயலாளர் யொஹான் லோரன்ஸ் செய்தியாளர் மாநாட்டில் பேசியபோது, இந்த கண்காட்சி தொழில்துறையில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதில் அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
” CEMS-Globalஇன் 14வது பதிப்பிற்காக மீண்டும் வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு, இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல — இலங்கையின் உற்பத்தியாளர்களுக்கு ஜவுளிகள், நூல், இயந்திரங்கள் மற்றும் பிற முக்கியமான தொழில்துறை உள்ளீடுகளின் உலகளாவிய விநியோகஸ்தர்களை, நேரடியாக அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று தொடர்ச்சியான கண்காட்சிகளை நாங்கள் கொண்டுள்ளோம். பெரிய நிறுவனங்களுக்கு நேரடி விநியோகச் சங்கிலிகள் இருக்கலாம், ஆனால் பல சிறிய உற்பத்தியாளர்கள் சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய பாடுபடுகின்றனர். இந்த கண்காட்சி அவர்களுக்கு இணைக்க, புத்தாக்கங்களை மேற்கொள்ள மற்றும் வளர ஒரு முக்கியமான தளதத்தை வழங்குகிறது,” என அவர் கூறினார்.
இலங்கையின் ஆடைத் துறை அதன் நெறிமுறை, நிலையான மற்றும் புத்தாக்கமான நடைமுறைகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சியடைந்து வருவதால், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பொருள் கண்டுபிடிப்புகளுக்கு முன்னணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. இந்த வாய்ப்பை வழங்குவதில் CEMS-Global இன் பங்கைப் பாராட்டிய லோரன்ஸ், இது “தொழில்துறைக்கு ஒரு திருப்புமுனை” என்று சுட்டிக்காட்டினார்.
தனது ஆதரவைச் சேர்த்துக்கொண்டு, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) தலைவர் ரஜித ஜயசூரிய, இந்த நிகழ்வு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஒத்துழைப்பு வழங்குவதில் வகிக்கும் பங்கை வலியுறுத்தினார்.
“இலங்கையின் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை ஏற்றுமதியாளர்களில் 70% க்கும் அதிகமானவர்களை SLAEA பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது போன்ற கண்காட்சிகள் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு (SMEs) புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகளை நேரடியாக அணுகுவதற்கு ஒரு முக்கியமான இடத்தை வழங்குகின்றன, அவர்கள் உலகளாவிய அரங்கில் போட்டியிட உதவுகின்றன. இலங்கை அதன் 8 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைய நாடுகையில், இது போன்ற தளங்கள் எங்கள் தொழில்துறையின் நிலையை வலுப்படுத்துவதில் மதிப்பற்றவை,” என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை சுமார் 300,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதுடன் எண்ணற்ற பலருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது, இது போன்ற நிகழ்வுகள் புத்தாக்கம் நிலைத்தன்மை மற்றும் மூலோபாய உலகளாவிய கூட்டாண்மைகளை ஊக்குவிக்கின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி ஒரு முக்கியமான தொழில்துறை நிகழ்வாக உறுதியளிக்கிறது, இது ஒத்துழைப்பு மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
CEMS-Global USA தனது பங்காளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நீண்டகால கண்காட்சி தொடர் மூலம் இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.