உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட பணிகள்

CLEAN SRILANKA வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று (11) முதல் கொழும்பு மாவட்டத்தில் வாகன புகை சோதனை தொடர்பான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலத்துக்குள் 1000 வாகனங்களில் புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் புகை பரிசோதனையில் தோல்வி அடையும் வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவு வழங்கப்படும் எனவும்,அதன்படி, 14 நாட்களுக்குள் பராமரிப்பு ஆணையின்படி திருத்தங்கள் செய்து வாகனத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, வாகன புகைப்பரிசோதனை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.