For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
DIMO Engine Care நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய வசதிகளுடன் தனது துல்லியமான பொறியியல் சேவையை மேம்படுத்துகிறது
DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது நீண்ட காலமாக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்று விளங்குகின்றது. தற்போது வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிக வேகம், வசதி மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை இது வழங்குகிறது.
அந்த வகையில், தனது Engine Care வசதியை தொழில்நுட்ப விசேடத்துவத்துடன், அதிக வசதியையும் இணைத்து வாடிக்கையாளர்களுக்காக ஒரு அதிநவீன வளாகமாக DIMO நிறுவனம் மீள்வடிவமைப்பு செய்து விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து, DIMO நிறுவனத்தின் வாகனப் பொறியியல் தீர்வுகளுக்கான (Automotive Engineering Solutions) பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன தெரிவிக்கையில், “இந்த மாற்றமானது, துல்லியமான பொறியியல் துறையில் எமது அடிப்படை பலத்தைப் பேணிக்கொண்டு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து பரிணமிப்பதற்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மேம்பட்ட இயந்திரங்களில் முதலீடு செய்வதன் மூலமும், எமது திறன்களை விரிவுபடுத்துவதன் மூலமும், சேவை வழங்கல் சூழலை மேம்படுத்துவதன் மூலமும், வாடிக்கையாளர்கள் எமது சிறந்த வேலைத் திறன்களை மாத்திரமல்லாமல், வேகமான, சுமூகமான, நம்பகமான சேவை அனுபவத்தை பெறுவதையும் நாம் உறுதி செய்கிறோம்.” என்றார்.
மேம்படுத்தப்பட்ட இந்த வசதியானது, மேம்பட்ட கண்டறியும் திறன்களுடன் (diagnostic capabilities) கூடிய விரிவான எஞ்சின் திருத்தம் மற்றும் மீள்கட்டியெழுப்பும் சேவைகளை வழங்குகிறது. இது எஞ்சின்கள் அதிக துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறனுடன் அவற்றின் உரிய செயல்திறனுடன் மீள்திரும்புவதை உறுதி செய்கிறது.
எஞ்சின் திருத்தம் மற்றும் இயந்திரப் பணிகளுக்கான ஒரு நிறுவனத்தை தெரிவு செய்யுபோது, இத்துறையிலுள்ள வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம், துல்லியமான வேலைப்பாடு மற்றும் நிலையான தரம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். DIMO Engine Care ஆனது, வெளிப்படையான விலை நிர்ணயம், சரியான நேரத்திற்கு விநியோகித்தல் மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான சேவைத் திறன் ஆகியவற்றின் மூலம் நம்பிக்கையையும் நம்பகத் தன்மையையும் வழங்குகிறது.
நிலையான முடிவுகளை உறுதி செய்வதற்காக DIMO நிறுவனம் தொடர்ச்சியாக உயர்தர ஐரோப்பிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதில் முதலீடு செய்கிறது. நவீன உபகரணங்களானது, இயந்திர பாகங்களுடன் மிகத் துல்லியமான வகையில் இயங்க உதவுகின்றன. இது எஞ்சினின் ஆயுட்காலம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதுடன், பிழைகளைக் குறைத்து வேலை நேரத்தையும் மீதப்படுத்துகிறது.
இந்த மையமானது மேம்பட்ட ஐரோப்பிய இயந்திரங்களை கொண்டுள்ளதுடன், மிகவும் திறமையான பணியாளர்களின் ஆதரவுடன் துல்லியமான மற்றும் நம்பகமான எஞ்சினை மீளக்கட்டியமைப்பதனை (engine rebuilding) சாத்தியமாக்குகிறது. துல்லியமான இயந்திரப்பணிகள் முதல் முழுமையான பரிசோதனைகள் வரை, ஒவ்வொரு செயன்முறையும் கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான பயிற்சிகளைப் பெறுகின்ற NVQ 4 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகளைக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவுடன், இக்குழுவினர் நிலையான வேலைப்பாடு, குறைந்த பணி நேரம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நம்பகமான முடிவுகளை உறுதி செய்கின்றனர்.
அதிகரித்து வரும் கேள்வி, மேம்பட்ட இயந்திரங்களை உள்வாங்குவதற்கான தேவை மற்றும் பணி படிமுறை வினைத்திறனை (workflow efficiency) மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் Engine Care சேவையானது இயக்கப்படுகின்றது. பாரிய மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இடமானது, சிறந்த செயன்முறை படிமுறை, தடையற்ற பணி, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வேகமான சேவையை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை விரைவான சேவை, நிலையான தன்மை மற்றும் தொழில்முறை ரீதியான அனுபவமாக இது அமைகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த சேவை மையமானது ஒட்டுமொத்த சேவைக் கட்டமைப்பின் மூலோபாய மேம்பாட்டை வெளிப்படுத்துகிறது.
DIMO Engine Care ஆனது ISO சான்றிதழ் மற்றும் AERA (American Engine Rebuilders Association) பதிவின் கீழ் இயங்குகிறது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதை இது உறுதிப்படுத்துவதுடன், அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. ஆரம்ப ஆய்வு முதல் இறுதி தரச் சோதனைகள் வரை, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கட்டமைப்பானது, சுமூகமான செயற்பாடுகளையும் நம்பகமான முடிவுகளையும் வழங்குகிறது.
இந்த மாற்றத்தின் மூலம், DIMO Engine Care ஆனது நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் தீர்வு வழங்குநராக பரிணமித்துள்ளது. சிறந்த எஞ்சின் செயல்திறனை மட்டுமல்லாமல், நிலையான வினைத்திறன் மற்றும் நம்பகமான சேவை அனுபவத்தையும் இது வழங்குகிறது.
Very insightful article, thank you for sharing. jbffcsbwrtxdxhkdudiymeata
Love this! Free Video Generator is genuinely free to start — 21 credits, no credit card. The community gallery is great for inspiration and the quality on the free tier is remarkable.