Homegrown finance company Siyapatha Finance PLC successfully unveiled its 65th branch in Chunnakam, Jaffna, further strengthening the Company’s presence in the Northern region of Sri Lanka. The branch was declared open by Siyapatha Finance PLC Chief Executive Officer (CEO) Mr. Mathisha Hewavitharana, in the presence of Chief Operating Officer (COO) Mr. Rajeev De Silva, Ms.P.Shanmugapriya,…
EWIS இடமிருந்து நிறுவனங்களின் இடர் தணிப்பு பழைமை முறைகளை நவீனமயப்படுத்துவதற்காக AI-வலுவூட்டப்பட்ட EWIS AEGIS அறிமுகம்
EWIS இலங்கையில் வடிவமைக்கப்பட்ட AI- வலுவூட்டப்பட்ட கட்டமைப்பான EWIS AEGIS ஐ அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு mission-critical பழைமை முறைகளை அதிக வேகம், கட்டுப்பாடு மற்றும் எதிர்வுகூறல்களுடன் நவீனமயப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு காப்புரிமை நிலுவையிலுள்ள ஒரு பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
வங்கியியல், காப்புறுதி, அரசாங்கம், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புகளின் பிரதான செயற்பாடுகளில் பழைமை முறைகள் தொடர்ந்தும் முக்கிய அங்கம் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இந்த சூழல்களை நவீனமயமாக்கல் என்பது சிக்கல் நிறைந்ததாகவும், அதிகம் செலவுகள் நிறைந்ததுடன், உயர் இடர் வெளிப்பாட்டைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால், கால தாமதம், அளவுக்கதிகமாக செலவுகள் மற்றும் செயற்பாட்டு தடங்கல்கள் போன்றன ஏற்படுகின்றன.
EWIS AEGIS இனால் இந்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், நிறுவனங்கள் தங்களது கட்டமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அவற்றை ஆய்வு செய்யவும், பாவனை செய்து பார்ப்பதற்கும், மற்றும் உறுதிப்படுத்தவும் வழிவகை செய்வதன் மூலம், தீர்மானம் எடுத்தலில் உள்ள நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதுடன் அச்செயன்முறையை மேம்படுத்தவும் உதவுகிறது.
மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னர் அவற்றை simulate செய்வோம். உலகளாவிய ரீதியில் மிகக்குறைந்தளவிலான தளங்களே செயற்படும், பழைய முறைமைகளை நவீனமயமாக்கல் பணியில், EWIS AEGIS முதலில் Simulation-first அணுகுமுறையைக் கையாள்கிறது.எவ்வித இடையூறுகளுமின்றி, பழைமை முறைகளை நவீனமயமாக்க இது நிறுவனங்களுக்குத் துணைபுரிகிறது. இப்பிராந்தியத்தில், முழுமையான மரபுவழி முறைமைப் பாவனையை சாத்தியமாக்கும் ஒரு சில தளங்களில் இதுவும் ஒன்றாகும். இது நிறுவன நவீனமயமாக்கலில் simulation-first எனும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
EWIS AEGIS, அளவிடக்கூடிய பெறுபேறுகளை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முறைமை மாற்றங்களுக்கு முன்னரான simulation-first validation மூலம் மாற்றச் செயல்முறையில் உள்ள இடர்களைக் குறைப்பதுடன், சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதன் ஊடாக நவீனமயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துகிறது. மேலும், mission-critical சூழல்களில் ஏற்படக்கூடிய செயலிழப்பு நேரத்தை இது வெகுவாகக் குறைக்கிறது. இது மீள்வேலைகளுக்கான தேவையைக் குறைப்பதன் மூலமும், இழப்பு வீதங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் செலவு தொடர்பான முன்கணிப்பை மேம்படுத்துவதுடன், மிகவும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகமான முறைமை மாற்றச் செயல்முறையையும் உறுதி செய்கிறது.
EWIS Group இன் தவிசாளர் சஞ்ஜீவ விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “மரபுவழி முறைமைகளை நவீனமயப்படுத்துவது என்பது, பாரம்பரியமாக அதிக இடர்களைக் கொண்ட ஒரு செயல்முறையாக அமைந்துள்ளது. எனினும், EWIS AEGIS ஊடாக நிறுவனங்கள் தமது நிச்சயமற்ற நிலையை நீக்கி, முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இது முறைமை மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே அதன் பெறுபேறுகளைப் புரிந்துகொள்ள வழிவகுப்பதுடன், மிகவுயர்ந்த தன்னம்பிக்கையுடனும் நம்பகத்தன்மையுடனும் அச்செயற்பாடுகளை முன்னெடுக்கத் துணைபுரிகிறது.” என்றார்.
EWIS AEGIS, மரபுவழி முறைமைகளின் தர்க்கங்களை பிரித்தெடுத்து வகைப்படுத்துவதற்காக AI-driven code intelligence ஐ பயன்படுத்துகிறது. மேலும், முறைமைகளுக்கு இடையிலான மறைமுகத் தொடர்புகளையும் இடர்களையும் கண்டறிய dependency mapping ஐ இது உபயோகிக்கிறது. ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, முறைமைகளின் செயல்பாடுகளைப் பிரதிபலித்து அவற்றை உறுதிப்படுத்துவதற்காக digital twin பாவனையையும் இது உள்ளடக்கியுள்ளது. அத்துடன், நவீன கட்டுமானங்களுக்கு தடையின்றி மாறுவதற்கு ஏதுவாக automated transformation ஐயும் இது வழங்குகிறது. இச்செயன்முறையின் முழுமையான துல்லியத்தை உறுதிப்படுத்துவதற்கும், தரவுகளின் நம்பகத்தன்மையை பேணுவதற்கும் AI-வலுவூட்டப்பட்ட பரிசோதனைகளையும்தன்னகத்தே கொண்டுள்ளது.
EWIS Group இன் பிரதம தொழில்னுட்ப அதிகாரி இசுரு திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “AI ஐ Digital Twin simulation உடன் இணைப்பதனூடாக, நவீன மயமாக்கலுக்கு தெளிவான மற்றும் தங்கியிருக்கக்கூடிய வழிமுறையை EWIS AEGIS வழங்குகின்றது. முன்கூட்டியே நிறுவனங்களால் கட்டமைப்பு நடத்தைகளை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதுடன், பாரியளவு மாற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட இடர்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.” என்றார்.
EWIS இன் வடிவமைப்பான EWIS AEGIS, உலகளாவிய சந்தைகளில் உள்ள நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தமது பழைய உட்கட்டமைப்பு வசதிகளிலிருந்து நவீன டிஜிட்டல் சூழலமைப்புகளுக்கு மாறும் இத்தருணத்தில், அவற்றுக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குகிறது.