டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மற்றும் இங்கிலாந்து ஆகிய 6 அணிகளில் கிரிக்கட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ஜாக் காலிஸ், பிரையன் லாரா, ஷேன் வாட்சன் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இலங்கை அணி ஆரம்ப சுற்றில் 5 போட்டிகளில் விளையாட உள்ளது. 22 ஆம் திகதி தொடரின் ஆரம்பநாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகின்றது இலங்கை அணி. இந்தப்போட்டி மும்பையில் இரவு 7.30 ஆரம்பமாகின்றது.

இலங்கை அணி எதிர்வரும் 26 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவையும், 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும், மார்ச் 6 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளையும், மார்ச் 10 ஆம் திகதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது .