உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
IML T20யில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இலங்கை.

இலங்கை பங்கேற்கும் 2025 IML T20 போட்டியின் 4வது போட்டி இன்று (மார்ச் 06) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை விளையாடவுள்ளது.
இந்தியாவின் வதோதராவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
2025 IML T20 புள்ளிகள் பட்டியலில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளதுடன் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது