இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!

இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது. உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற…

Read More

அரச ஊழியர்களின் சம்பளம் வாய்ப்புள்ளது…!

நாளை(வெப்ரவரி 17) புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சர்க்கப்படவுள்ளநிலையில் அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுகளையும் , புதிய நியமங்களையும் எதிர்பார்த்துள்ளதாக அரசஊழியர்களும், வேலையில்லா பட்டதாரிகளும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இன்றைய இலங்கையில் பொருளாதாரத்தலம்பலின் மத்தியில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைக்கு அமைவாக அமையும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

SLINTEC ආයතනය,  Inovartic Investment Lanka (Pvt) Ltd සමාගම සමග ග්‍රැෆීන් තාක්ෂණික ගිවිසුමකට එළඹෙයි

2025 ජනවාරි, කොළඹ – ශ්‍රී ලංකා නැනෝ තාක්ෂණ ආයතනය (SLINTEC), ග්‍රැෆීන් මත පදනම් වූ තෙල් අවශෝෂණය කර ගන්නා අමුද්‍රව්‍යයක් නිර්මාණයකර එය බාර දීමට කටයුතු කළ බව පසුගියදා නිවේදනය කළේය. මෙතෙක් නොවූ විරූ ආකාරයේ කාර්යක්ෂමතාවකින් යුතුව මහා පරිමාණයෙන් පරිසරයට මුදා හැරෙන තෙල් අවශෝෂණයකර ගැනීමට හැකි පරිදි මෙය නිර්මාණයකර ඇත. ශ්‍රී ලංකාවේදී පර්යේෂණ සහ සංවර්ධන කටයුතු සිදුකර…

Read More

முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட கடல் சாத்தான்

கருப்பு கடற்பறவை என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆழ்கடல் ராட்சத ஆங்லர்ஃபிஷ் சமீபத்தில் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் கடற்கரையில் ஒளி நிறைந்த நீல நீரில் அரிதாகத் தோன்றியிருக்கின்றது. இந்தவகை கடல் சாத்தன் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் வாழ்வதால் இதுவே அது படமாக்கப்படுவது முதல் முறையாகும்.அண்ணல் இந்த வகை மீன் ஏன் இவ்வளவு ஆழமற்ற நீர் பரப்புக்கு வந்ததென்பது தெரியவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண் ஆங்லர்ஃபிஷ்கள் தங்கள் தலையில் உள்ள “மீன்பிடி கம்பம்” போன்ற அமைப்பிற்க்காய்…

Read More

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பற்றவையிடச்சென்ற பிரதமர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை இன்று (வெப்ரவரி 15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து பல்வேறு முக்கிய…

Read More

அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக…

Read More

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கைக்கு 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஜனவரி 1 ஆம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவாக பணியாளர்கள், வாகன சாரதிகள்,…

Read More

இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுகாதாரப்பரிசோதகருக்கு சிறை.

ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க இலஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கலேவெல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளர், நேற்று (வெப்ரவரி 14) ரூ. 200,000 இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

கிரிபாவ பொலிஸ் பிரிவின் தம்சோபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவா பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்சோபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More