Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
இலங்கையில் சாபக்கேடாக மாறும் சிறுநீரக நோய்!
இலங்கையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோயினால்
ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர்.
கடந்த 10வருடங்களில் இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதோடு, சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் நாட்டில் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் வெளியிட்ட தகவலில் வெளியிடப்பட்டுள்ளது.
உடனடி சிகிச்சை பெறமுடியாத நாள்ப்பட்ட சிறுநீரக நோயாளர்களே இவ்வாறு மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்க்கு பல காரணங்கள் இருந்தபோதும் முக்கிய காரணங்களாக சுண்ணாம்பு படிவுள்ள தண்ணீர் குடிநீராக மாறுவது, இரசாயன பதார்த்தங்கள் நிலத்தடி நீரோடு கலப்பது போன்றவை முக்கிய காரணங்களாக அமைகின்றன.
உடல் எடையை சரியாகப் கடைபிடிப்பதோடு, நாளுக்கு 3லீட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும், புகைப்ப்பிடித்தல் மற்றும் புகையிலை தவிர்ப்பது நல்லது, மிக நிதானமாக இந்த னாய் பரவுவதால் தனிநபர் வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரக சோதனை செய்வது நல்லது.
அதேநேரம் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான காலத்தை விரைவுபடுத்தவேண்டும்.