JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய மூவர் கைது
மீடியாகொட – தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஒத்துழைப்பை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீடியாகொட மற்றும் கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீடியாகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.