உரமானியம் கிடைக்காததால் வேதனையில் விவசாயிகள்

சிறுபோகத்திற்கான விளைச்சல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் இதுவரையிலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக பதினைந்தாயிரம் மெற்றிக் டன் உரம் தேவைப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறித்த உரத்தொகையானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் உரம் வழங்கப்படாமையால் எதிர்பார்த்தளவு விளைச்சலைப் பெற முடியாது எனவும் விவசாய அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மானிய விலையில் உரம் வழங்கப்படாமையினால் அதிக விலைக்கு உரத்தை…

Read More

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு…

Read More

பருத்தித்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

இன்று முதல் தேர்தல் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,…

Read More

செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் இதனை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி முன்னதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ நடத்திய ஏழு மணி நேரத்திற்கும் மேலான முன்னைய சாதனையை 2019 ஒக்டோபரில், உக்ரைனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கி 14 மணி நேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி முறியடித்திருந்தார். ஆனால் தற்பொழுது 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பிரார்த்தனைக்காக சுருக்கமான இடைநிறுத்தங்களுடன் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசேட சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். இதற்கமையவே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடாத்தப்பட்டதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5…

Read More

வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பேணும் நோக்கத்துடன் புதிய வடிவில் மீள அறிமுகமாகும் Clogard Natural Salt

இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் Hemas Consumer Brands நிறுவனத்திற்குச் சொந்தமான க்ளோகார்ட் (Clogard), வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை பெறுவதனை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தனது பிரபலமான Clogard Natural Salt Toothpaste தயாரிப்பை புதுப்பித்து மீள அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. புதிய வடிவமைப்பாக வெளியான இந்தப் பற்பசை, வலுவான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய வாய்ச் சுகாதார ஆய்வின்படி, 5 சிறுவர்களில் ஒருவர் ஈறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும்,…

Read More

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள்

இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த காலப்பகுதியினுள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

IPL இன் இன்றைய முக்கிய இரண்டு போட்டிகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் குறித்த போட்டியானது, இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் இன்றைய தினத்திற்கான இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தோல்விக்கு நானே பொறுப்பு – தோனி

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால்…

Read More