இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
இந்தியாவைக் காப்பாற்றுவதோ , மோடியைக் காப்பாற்றுவதோ எங்கள் நோக்கமல்ல
எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் உரையாடலை மேற்கொள்ளவுள்ளார் என்றார். இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவர் பிரச்சினைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல….