கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்க NPP தயாரில்லை : திகா எம்.பி
மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச் காணியை உடன் வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை.
வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள்மீது இந்த அரசாங்கத்தக்கு உண்மையாகவே கரிசணை இருக்குமானால் உடனடியாக 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும்.
அதனை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என 6 மாதங்களாக கூறிவருகின்றனர்.
ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மலையக மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.” – என்றார்.