Prime Lands Residencies PLC appoints Senior Professor Sampath Amaratunge to the Board

Prime Lands Residencies PLC, Sri Lanka’s leading real estate developer, announced the appointment of Senior Professor Sampath Amaratunge as an Independent, Non-Executive Director to the Board. The appointment, resolved by the Board on March 27, 2025, is effective immediately. Prof. Amaratunge brings extensive expertise in economics, governance, and corporate strategy to Prime Lands Residencies PLC,…

Read More

இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

Read More

மியான்மர் நிலநடுக்கம் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மியான்மிரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மண்டலே நகருக்கு அருகில் இதன் மையப் பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது….

Read More

48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம்.. கப்பலில் காத்திருந்த அதிர்ச்சி

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர். அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும். இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான…

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ,…

Read More

இன்று இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது….

Read More

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கிரிபாவ பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 157,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, கல்கமுவ…

Read More

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…

Read More

சமூக ஊடகங்களை ஆளும் “ஜிப்லி”

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனா். பலரது சுயவிவரப் படங்களிலும் இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்கள் அலங்கரிக்கின்றன. ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான ‘சாட்ஜிபிடி’ உள்ளிட்ட சில தகவல் உதவி செயலிகள்தான் மக்களுக்கு இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்களை இலவசமாக உருவாக்கித் தருகின்றன. சமூக…

Read More