Cambridge University Press & Assessment hosted the Cambridge English Leadership Conference (CELC) 2026 in Colombo, bringing together principals, school leaders and English educators to discuss how schools can prepare learners for success in an increasingly AI-enabled world. The conference explored how learner-centred classrooms, effective assessment, data-driven feedback, and strong foundations in communication can help students…
5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்: Huawei இன் புதிய U6GHz தயாரிப்புகள் அறிமுகம்
பார்சிலோனாவில் நடைபெற்ற 2026 உலக நடமாடும் தொலைத்தொடர்பு மாநாட்டில் (MWC)> 5G-A (5G-Advanced) தொழில்நுட்பத்தின் முழுத் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்கால 6G சீரான பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகவும் தனது புதிய U6GHz தயாரிப்புகளை Huawei நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் மொபைல் செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்திற்குத் தேவையான வளர்ந்து வரும் மொபைல் AI யுகத்திற்கு அவசியமான அதிவேகத் தரவுப் பரிமாற்றம், மிகக் குறைந்த காலதாமதம் மற்றும் உயர்தரப் பயனர் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய அறிவுசார் உலகத்தின் மைய சக்தியாக AI உருவெடுத்துள்ளது. சர்வதேச தரவு நிறுவனமான IDC இன் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் AI செயலிகள் மற்றும் சாதனங்களின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. உலகளாவிய மாதாந்த AI பயனர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனைக் கடந்துள்ளதோடு, சந்தைக்கு வரும் புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை AI திறன் கொண்டவையாக இருக்கின்றன. இத்தகைய வளர்ச்சி மொபைல் துறையில் புதிய வாய்ப்புகளைத் திறந்தாலும், நெட்வொர்க் கட்டமைப்பில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, AI ஊடாடல்களால் அப்லிங்க் தரவுத் தேவை 3 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளதுடன், நிகழ்நேரத் தரவுப் பரிமாற்றம் மற்றும் பரவலான AI முகவர்களின் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான நெட்வொர்க் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.
தற்போது 5G-A தொழில்நுட்பம் உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முக்கிய வணிகத் தொழில்நுட்பமாக மாறியுள்ளது. இதில், U6GHz அலைக்கற்றையானது அதன் பரந்த அலைவரிசை மற்றும் சிறந்த கவரேஜ் காரணமாக 5G-A இன் வணிகப் பயன்பாட்டிற்கு முக்கியத் தூணாகத் திகழ்கிறது. WRC-23 மாநாட்டைத் தொடர்ந்து, U6GHz முக்கிய மொபைல் தகவல் தொடர்பு அலைக்கற்றையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த அலைவரிசையை அடையாளம் காண்பது, ஒதுக்கீடு செய்வது மற்றும் சோதனை முயற்சிகளை மேற்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டில் இதற்கான முக்கிய நுகர்வோர் உபகரணங்கள் (CPEs) மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என்பதால், U6GHz அலைக்கற்றையின் பயன்பாடு பெருமளவில் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Huawei நிறுவனத்தின் முழுமையான U6GHz தயாரிப்பு வரிசை, மேக்ரோ தளங்கள், மைக்ரோ தளங்கள் மற்றும் மைக்ரோவேவ் உபகரணங்கள் என ஒரு முழுமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இது மொபைல் AI பயன்பாடுகளின் உயர் திறன் மற்றும் குறைந்த காலதாமதத் தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்கிறது. இதில் திறந்தவெளிப் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள U6GHz 256 TRX AAU சாதனமானது, ‘Extremely Large Antenna Array’ (ELAA) வடிவமைப்பு மற்றும் நவீன Beamforming அல்காரிதம்களைப் பயன்படுத்துகிறது. இது 400 MHz வரையிலான பரந்த அலைவரிசையைக் கையாள்வதன் மூலம், பதிவிறக்கத்தில் 100 Gbps மற்றும் பதிவேற்றத்தில் 10 Gbps வரையிலான உச்சக்கட்ட வேகத்தை வழங்குகிறது. இது கோடிக்கணக்கான AI சாதனங்களை ஒரே நேரத்தில் தடையின்றி இணைக்கத் உதவி புரிகிறது.
அதேபோல், கட்டிடங்களுக்குள் தடையற்ற AI அனுபவத்தை வழங்க Huawei ‘சிறிய செல்’ (Small cell) தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 400 MHz அலைவரிசையை ஆதரிப்பதோடு, உட்புற மற்றும் வெளிப்புறங்களில் சீரான நெட்வொர்க் அனுபவத்தை உறுதிப்படுத்துகின்றன. மேலும், தரவுப் பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பங்கள், தொழில்துறையில் தனித்துவமான ‘Full-duplex’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது 5G-A இன் உச்சக்கட்டத் தரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், 6G தொழில்நுட்பத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. Huawei-இன் இந்த முழுமையான தயாரிப்பு வரிசை தற்போது வணிக ரீதியாகக் கிடைக்கிறது, இந்தத் தொழில்நுட்பப் புரட்சி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அறிவுசார் உலகிற்கான பிணைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.