கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 %

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது. உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது….

Read More

பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப்படுகடன் திணைக்களத்தை மூடி, அத்திணைக்களத்தின் ‘Lanka Secure ‘ பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துக்கு இடமாற்றுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் கடந்த ஆண்டு…

Read More

தையிட்டி விகாராதிபதி பதவி உயர்வுக்கு எதிராக போராட்டம்: 11 உறுப்பினர்களுக்கு அழைப்பு கட்டளை

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின்…

Read More

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; தீவிரமாக விசாரணை

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து தொடர்பாகக் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  அனுமதி விதிகள், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக இருந்தனவா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கிறிஸ்டியன் லென்ஸ் கூறுகையில், “பாதுகாப்பு கடமைகளைத் தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். பாரின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும்,…

Read More

கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் காணமல் போனோரை இனம் காண முடியாத நிலை ; உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதாக தெரிவிப்பு

கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுள்ளது . உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால் உறவினர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவர்கள் குறித்த தகவல்களைத் தேடி வருகின்றனர்.

Read More

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு

கிரான்ஸ்-மொன்டானாவில் சுமார் 40 பேரை பலிகொண்ட தீ விபத்து  2003-ல் அமெரிக்காவின் ‘தி ஸ்டேஷன்’ கிளப்பில் நடந்த துயரத்தை நினைவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுள்ளது . ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த பட்டாசுப் பொறிகள், மேற்கூரையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஒலித்தடுப்பு அட்டைகள் மீது பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விபத்திலும் இதேபோல் பட்டாசுப் பொறிகளால் நுரை பஞ்சுகள் (polyurethane foam) தீப்பற்றி 100 பேர் உயிரிழந்தனர் இத்தகைய விபத்துகளில் இருந்து பாடம்…

Read More

John Keells Foundation and Victoria Golf Resorts vest Nithulemada Model Pre-school in the Medadumbara Pradeshiya Sabha

John Keells Foundation (JKF) and Rajawella Holding’s Victoria Golf Resort (VGR) vested the Nithulemada Model Pre-School in the Medadumbara Pradeshiya Sabha with the aim of improving access to early childhood education for children aged 3–5 years in the Medadumbara Pradeshiya Sabha of the Kandy District. For over two decades, children in Udagama, representing diverse ethnicities,…

Read More

Sri Lanka Insurance Corporation General Limited inaugurates business operations for 2026

1st January 2026, Colombo: Sri Lanka Insurance Life Ltd and Sri Lanka Insurance General Ltd inaugurated their business operations for the year 2026 on 1st January at the Sri Lanka Insurance Head Office. The event was graced by the Chairman, Board members, Corporate Management, and staff of SLIC. Parallel business launches were also conducted at…

Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி நீதியமைச்சரிடம் அதிருப்தி

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மக்கள் போராட்ட முன்னணியினர், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதனைப் பதிலீடு செய்வதற்காகப் புதிய சட்டம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய…

Read More