Seylan Bank has launched its latest Seylan Cards Redeem & Win promotion, giving Seylan Cardholders another exciting reason to make the most of their accumulated reward points. Running from 1 July to 31 August 2026, the campaign offers Seylan Cards Rewards Programme members the opportunity to win two return air tickets to Malaysia, courtesy of…
Prime Group மற்றும் கூட்டாண்மை: இரண்டு முன்னோடிகள் ஒரே தொலைநோக்கு
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகத் திகழும் Prime Group, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களான பாதியா மற்றும் சந்துஷ் (BNS) உடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை, உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டாண்மை, தத்தமது துறைகளுக்குள் சிறப்பாகத் திகழ்வதை மறுவரையறை செய்துள்ள இரண்டு முன்னணி வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. BNS, இலங்கை இசையை சர்வதேச மேடைகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ள வேளையில், Prime Group, உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய வீட்டுமனைத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் அத்தகைய தொலைநோக்குப் பார்வையை நோக்கிப் பயணிக்கின்றது.
இலங்கையின் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களில் ஒருவரான உமாரியா, Prime Group இன் வர்த்தக நாமத் தூதுவராக திகழ்கிறார். பல்வேறுபட்ட நுகர்வோருடனான நிறுவனத்தின் பிணைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதுடன், இலங்கையின் சிறப்பை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறார்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைப்பதில் Prime Group முக்கிய பங்காற்றியுள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக Prime Group திகழ்கின்றது. நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் சொகுசு தொடர்மனைகள், கலப்பு-பாவனை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரியல் எஸ்டேட் நிர்மாணங்கள், வீடமைப்புகள் மற்றும் காணிகள் போன்றன அடங்கியுள்ளன.
அண்மையில், இக்குழுமமானது கொழும்பு போர்ட் சிட்டியினுள் உலகத்தரம் வாய்ந்த marina-front development ஆக Prime Melwa Port City திட்டத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளது. இத்திட்டமானது இப்பிராந்தியத்தில் luxury waterfront living மறுவரையறை செய்வதாகவும், உலகிலேயே மிகக் கவர்ச்சிகரமான முதலீட்டு இலக்குகளில் ஒன்றாக இலங்கையை நிலைநிறுத்துவதாகவும் அமைந்திருக்கும்.
இந்தப் பங்காண்மை தொடர்பில் சந்துஷ் வீரமன் கருத்துத் தெரிவிக்கையில், “எங்களது இந்த நீண்ட பயணத்தில், இலங்கையின் எல்லையைக் கடந்து சர்வதேச ரீதியில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நாங்கள் எப்போதும் ஆழமாக நம்பி வந்துள்ளோம். இலங்கைக்கே உரிய ரியல் எஸ்டேட் துறையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதற்கான Prime Group இன் இலட்சியம், எமது குறிக்கோளுடன் வலுவாக பொருந்துகின்றது. இக்கூட்டாண்மையானது, இலங்கையின் மிகச் சிறந்த திறமை, புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான இருதரப்பினரதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.” என்றார்.
பாதியா ஜயகொடி குறிப்பிடுகையில், “சர்வதேச ரீதியில் போட்டியிடுவதற்கான அபாரமான சாத்தியக்கூறுகளை இலங்கை கொண்டுள்ளது. Prime Group இன் தொலைநோக்குப் பார்வை, அதன் பிரமாண்டம் மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கான அர்ப்பணிப்பு என்பன, உள்ளூர் இலட்சியமானது உலகளாவிய சிந்தனையோடு இணையும்போது எதனைச் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு நாங்கள் பெருமையடைகின்றோம்.” என்றார்.
இந்தக் கைகோர்ப்பு தொடர்பில் Prime Group பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில்,: “எங்களது தொலைநோக்கு என்பது, வீட்டுமனைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அப்பால் விரிவடைந்துள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் இலங்கை ரியல் எஸ்டேட் வர்த்தகநாமத்தை நாங்கள் கட்டியெழுப்பி வருகின்றோம். சர்வதேச முதலீட்டாளர்களை நாங்கள் தொடர்ந்து ஈர்த்து வருவதுடன், உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை உருவாக்கி வருகின்ற வேளையில், எங்களது உலகளாவிய ரீதியிலான தோற்றப்பாட்டை வலுப்படுத்துவதில் இத்தகைய கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாத்தியா, சந்துஷ் மற்றும் உமாரியா ஆகியோர் இலங்கையின் திறமைக்கான தூதுவர்களாக மாறியுள்ளனர், மேலும் உலக அரங்கில் இலங்கையின் சிறப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு பொதுவான நோக்கத்தை நாங்கள் இணைந்து பகிர்ந்து கொள்கின்றோம்.” என்றார்.
இக்கூட்டாண்மையின் ஊடாக, BNS மற்றும் உமாரியா ஆகியோர் Prime Group நிறுவனத்தின் வர்த்தகநாமக் கட்டமைப்பு முயற்சிகளுக்கு தீவிரமாக ஆதரவளிக்கவுள்ளனர். இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நுகர்வோருடனான பிணைப்பை வலுப்படுத்துவதுடன், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் வர்த்தகநாமமாக மாறுவதற்கான இக்குழுமத்தின் மூலோபாய இலட்சியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
கைகோர்ப்பு என்பதற்கு அப்பால், இந்தப் பங்காண்மை, இலங்கையின் திறமை, வியாபாரம் மற்றும் இலட்சியம் போன்றன நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் வியாபித்து உலக அரங்கில் எவ்வாறு வரவேற்பைப் பெறும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான அறிக்கையாக அமைந்துள்ளது.
இடமிருந்து: Prime Lands பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய; Prime Group இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா; பாத்தியா ஜயகொடி, BNS; சந்துஷ் வீரமன், BNS; Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே; மற்றும் Prime Group பணிப்பாளர் ஷிஹானா பிராஹ்மனகே.