Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
Prime Lands Residencies PLC இன் ‘The Colombo Border’ திட்டத்துக்கு முதலீட்டு சபையின் 65 மில். அமெரிக்க டொலர் விஸ்தரிப்பு அனுமதி.

ரியல் எஸ்டேட் துறையில் புத்தாக்கத்துக்கு புகழ்பெற்ற நாமமான Prime Lands Residencies PLC, இலங்கையின் நகர வசிப்பகத் துறையில் ‘The Colombo Border’ திட்டம் ஒரு முக்கிய முன்னேற்றமாக உருவாகிறது.
The Grand Ward Place திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்ததை தொடர்ந்து, Colombo Border திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக முதலீட்டு சபையிடமிருந்து 65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டுள்ளது. Prime Lands இன் ஏற்கனவே காணப்படும் முதலீட்டு சபை செயற்திட்ட பிரிவில் குறிப்பிடத்தக்களவு விரிவாக்கமாக இந்த முதலீடு அமைந்திருக்கும்.
முதலீட்டு திட்டத்தின் தகுதியாக, தரம் மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தோற்றப்பாட்டுக்கு முன்னுரிமையளித்து, அதன் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் செயற்திட்டத்தின் விருத்தியை, கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாக்கலில் புதிய நியமங்களை ஏற்படுத்தும் வகையில் The Colombo Border திட்டம் அமைந்திருக்கும். இலங்கையில் நகர வாழிடம் தொடர்பான உறுதியான அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், வாழ்க்கைமுறை அனுபவங்கள் மற்றும் வதிவிட விருத்தி போன்றவற்றில் நாட்டின் எதிர்காலத்தை அடையாளப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. மேலும், The Colombo Border திட்டத்தினூடாக இலங்கையின் நகரமயமாக்கல் கட்டமைப்பில் பொருத்தமான வாழ்க்கைமுறையை கட்டியெழுப்பும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்ட வழிமுறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மூன்று கண்கவர் சொகுசு டவர்கள் அடங்கியிருக்கும். இதில் உயரமான டவரில் 26 மாடிகள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு டவரும் உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தொடர்மனைங்களை கொண்டிருப்பதுடன், வசிப்போருக்கு நவீன சொகுசு அனுபவத்தை வழங்குவதாகவும் அமைந்திருக்கும். இந்த தொகுதியில் மொத்தமாக 484 சொகுசு தொடர்மனைகள் அடங்கியிருக்கும். இவை ஒவ்வொன்றும் நவீன வடிவமைப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் அதிகளவு இடவசதி படைத்த இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அலகுகளை அணுக முடியும். அவை அனைத்தும், Prime Lands Residencies இன் தரத்தை பிரதிபலிப்பதாக காணப்படும்.
6 ½ ஏக்கர் பரந்த காணியில் நிர்மாணிக்கப்படும் இந்தத் திட்டத்தின் சுமார் 80% ஆன பகுதி திறந்த, பசுமையான வெளிகளை கொண்டதாக இருக்கும். அதனூடாக, நகரத்தின் சௌகரியத்துடன், இயற்கை அம்சங்களை அனுபவிக்கும் வசதி வசிப்போருக்கு ஏற்படுத்தப்படுத்தப்படும்.
இன்று, Colombo Border திட்டம் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 3000க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பை கொண்டுள்ளதுடன், இல்லங்களையும், எதிர்காலங்களையும் கட்டியெழுப்பி, உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பு செலுத்துகின்றது.
Colombo Border திட்டத்தின் புரட்சிகரமான அங்கமாக, அதன் சகாயத்தன்மை அமைந்துள்ளது. Prime Lands Residencies ஊடாக புரட்சிகரமான மாதமொன்றுக்கு 1% கொடுப்பனவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் பரந்தளவு பிரிவினருக்கு சொகுசான வாழிட அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தாக்கமான கொடுப்பனவு திட்டங்களினூடாக, உயர் மட்ட வதிவிடங்கள் தொழில்புரியும் குடும்பங்களால் அணுகக்கூடியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றுக்கான Prime Lands’ இன் அர்ப்பணிப்பு என்பதுடன், முதலீட்டு சபையின் மேற்பார்வையினூடாக, Colombo Border திட்டம் வசிப்போருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறந்த பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உறுதிமொழியளிக்கப்பட்ட வாழக்கை முறையினூடாக சொகுசு மற்றும் சகாயத்தன்மை என்பன வாழ்வுடன் இணைக்கப்படுவதுடன், இயற்கை அழகுடன், நகர வாழ்க்கையை அனுபவிப்பதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அமைந்திருக்கும்.
